பொங்கல் பண்டிகை முன்னிட்டு மண்பானை அமோக விற்பனை

கரூர், டிச.27: கரூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானை விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. தமிழக மக்களால் அதிகளவு விரும்பி கொண்டாடப்பட்டு வரும் பண்டிகைகளில் பொங்கல் பண்டிகையும் ஒன்று. பொங்கலன்று, புது மண்பானையில் பொங்கல் வைத்து இறைவனை வழிபடுவது அனைவரின் வழக்கம். இதன் காரணமாக பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக கரூர் நகரப் பகுதிகளில் மண்பானை விற்பனை அதிகளவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கரூர் மார்க்கெட் பகுதியில் புது புது வடிவங்களில் மண்பானை விற்பனை நடைபெற்று வருகிறது. ஒரு பானை ரூ.80ல்  இருந்து பானையின் அளவுக்கு ஏற்ப வியாபாரிகளால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையின் முக்கிய தேவையாக உள்ள மண்பானையை மக்களும் அதிகளவு ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

Related Stories: