சரக்கு ரயிலில் 2600 டன் தவிடு வருகை

நாமக்கல், டிச.22: நாமக்கல் மாவட்டத்தில் ஏராளமான கோழிப்பண்ணைகள் உள்ளன. கோழித்தீவனம் தயாரிக்க பயன்படும் மக்காச்சோளம், கடுகு புண்ணாக்கு மற்றும் தவிடு போன்றவை வட மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் நாமக்கல் கொண்டு வரப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து 2600 டன் தவுடு மூட்டைகள் நேற்று சரக்கு ரயில் மூலம் நாமக்கல் ரயில் நிலையத்திற்கு வந்தது. இங்கிருந்து நாமக்கல், கரூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு 120 சரக்கு லாரிகளில் ஏற்றி அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டனர்.

Related Stories: