ஆருத்ரா தரிசன விழா

உளுந்தூர்பேட்டை, டிச. 21:  உளுந்தூர்பேட்டையில் உள்ள பழமையான காமாட்சி அம்மை சமேத கைலாசநாதர் கோயிலில் நேற்று காலை ஆருத்ரா தரிசன வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு நடராஜருக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஜெகதீச குருக்கள் தலைமையில் மகா தீபா ராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய்விளக்கு ஏற்றி வழிபட்டனர். இதேபோல் உளுந்தாண்டார்கோவில் பகுதியில் உள்ள மாஷபுரீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனம் துரைசாமி குருக்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் உள்ள  பாலாம்பிகா சமேத பாண்டீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. முன்னதாக சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜமூர்த்திக்கு ரவி குருக்கள், விஸ்வநாத குருக்கள் ஆகியோர் கொண்ட குழு அபிஷேக ஆராதனைகள், புஷ்ப அலங்காரம், 108 அபிஷேகங்கள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் தேவபாண்டலம், குளத்தூர், வரகூர், ஆரூர், சங்கராபுரம், பூட்டை, மஞ்சப்புத்தூர் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Related Stories: