தேர்தல் பணியில் ஈடுபட்டதற்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்

கீழ்வேளூர், டிச.8: தேர்தல் பணியில் ஈடுபட்டதற்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என கிராம உதவியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். நாகை மாவட்டம் கீழ்வேளுரில் தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்க வட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் மோகன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பண்டரிநாதன் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் செல்லமுத்து வரவேற்றார். கூட்டத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பணியாற்றிய கிராம உதவியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு சிறப்பு ஊதியம் கீழ்வேளூர் வட்டத்தில் பணிபுரிந்த கிராம உதவியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கிட வேண்டும். ஜாக்டோ ஜியோ நடத்திய போராட்டத்தில் கிராம உதவியாளர்கள் கலந்துகொண்ட காலங்களுக்கு ஊதியம் வழங்கிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் புதிய வட்ட நிர்வாகிகளாக தலைவராக செல்லமுத்து, துணைத் தலைவராக திருச்செல்வன், செயலாளராக அன்பரசன், பொருளாளராக பூமிநாதன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Related Stories: