கைத்தறி தொழில் கச்சா பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் பரமக்குடி நெசவாளர்கள் கோரிக்கை

பரமக்குடி, டிச. 5:   பரமக்குடிக்கு நகராட்சிக்குட்பட்ட எமனேஸ்வரம் முருகன் கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சங்கத்திற்கு, கைத்தறி துணிநூல் துறை அரசு முதன்மை செயலாளர்  தர்மேந்திர பிரதாப் யாதவ், மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் ஆகியோர் நேரில் வருகை தந்தனர். அவர்களை, பரமக்குடி கைத்தறி துணி நூல் துறை உதவி இயக்குநர் சந்திரசேகரன், முருகன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் நாகராஜன் ஆகியோர் வரவேற்றனர்.

கைத்தறி நெசவாளர்கள் நெய்த சேலை ரகங்களை ஆர்வத்துடன் பார்வையிட்டு சேலைகள் நெய்யும் முறைகளை கேட்டறிந்தனர். தொடர்ந்து நெசவாளர்கள் காட்டன் சேலையில் பாரதியார், பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின் பிங், தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவங்களுடன் உருவாக்கப்பட்ட கைத்தறி சேலைகளை பார்வையிட்டனர்.

 பின்பு பரமக்குடி - எமனேஸ்வரம் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் பெடரேஷன் தலைவர் சேஷய்யன், செயலாளர்கள் கோதண்டராமன் ஆகியோர்  பரமக்குடி - எமனேஸ்வரம் பகுதியில் 80 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. கைத்தறி தொழிலுக்கு தேவையான பருத்தி, பட்டு, செயற்கை பட்டு, நூல் விலை உயர்வு ஆகியவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் முருகன், வட்டாட்சியர் தமீம்ராஜா, அச்சங்குளம் கூட்டுறவு நூற்பாலை துணை இயக்குநர் ஜமால் முகம்மது, கைத்தறி அலுவலர் மோகனா மற்றும் கைத்தறி சங்க  நிர்வாகிகள்,  நெசவாளர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: