வரும் 16, 17ம் தேதியில் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்

திருப்பூர், டிச. 5: வரும் 16, 17ம் தேதிகளில் வங்கியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துகின்றனர். இதுகுறித்து, வங்கி அதிகாரிகள், ஊழியர் சங்கங்களின் கூட்டுக்குழு திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர் மனோகரன் கூறியதாவது: பொதுத்துறை வங்கிகளை தனியார் மயாக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. பார்லிமென்ட் கூட்டத்தொடரில் இரண்டு வங்கிகளை தனியார் மயமாக்கும் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி அதிகாரிகள், ஊழியர் சங்க கூட்டுக்குழு சார்பில், அகில இந்திய அளவில் இரண்டு நாட்கள் வேலைநிறுத்த போரட்டம் நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், மொத்தம் 352 வங்கி கிளைகள் உள்ளன.

இதில் பணிபுரியும் ஆயிரம் அதிகாரிகள், 2 ஆயிரம் ஊழியர்கள் என 3 ஆயிரம் பேர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். இதனால், வழக்கமான வங்கி பணிகள் அனைத்தும் முடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More