ஜோதிலிங்கேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

போச்சம்பள்ளி, டிச.3: போச்சம்பள்ளி கருமலை நடுபழனி ஆண்டவர் நகரில் அமைந்துள்ள ஜோதிலிங்கேஸ்வரர் கோயிலில், நேற்று முன்தினம் சிவராத்திரி பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி, கோயிலில் உள்ள நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஜோதிலிங்கேஸ்வரருக்கு தீபாரதனையை தொடர்ந்து நந்திக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்- ஆராதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories:

More