மரத்தில் பைக் மோதி வாலிபர் பரிதாப சாவு

சேத்தியாத்தோப்பு, டிச. 2:சேத்தியாத்தோப்பு அருகே அள்ளூர் மேலத்தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மகன் மணிவண்ணன் (21), கூலித் தொழிலாளி. இவரும் அதே கிராமத்தை சேர்ந்த ராமநாதன் மகன் பிரவீன்ராஜ் ஆகிய இருவரும் அள்ளூரில் உள்ள தனது வீட்டிலிருந்து குமாரக்குடி அருகே உள்ள அவரது உறவினரின் விவசாய பண்ணைக்கு சென்றனர். குமாரக்குடியில் உள்ள தனியார் சிமென்ட் வொர்க்ஸ் எதிரே சென்றபோது பைக்கை மணிவண்ணன் ஓட்டியுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த ஆலமரத்தில் பைக் மோதியது. இதில் மணிவண்ணனும், பிரவீன்ராஜீம் பலத்த காயமடைந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மணிவண்ணனின் தந்தை அன்பழகனுக்கு தகவல் அளித்தனர்.  

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அன்பழகன் பலத்த காயமடைந்து கிடந்த இருவரையும் மீட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மணிவண்ணனை பரிசோதித்த டாக்டர்கள் மணிவண்ணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பலத்த காயமடைந்த பிரவீன்ராஜ் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அன்பழகன் சேத்தியாத்தோப்பு காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More