அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு 2ம் கட்ட தடுப்பூசி

நாகர்கோவில், ஏப்.23:குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளின்  தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்று (23.4.2021) இரண்டாவது தடவையாக தடுப்பூசி போடுவதற்கு வசதியாக ஒன்றியம் வாரியாக ஒரு பள்ளி தடுப்பூசி போடும் முகாமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தடவை தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து பணியாளர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது இருப்பிடத்தின் அருகே உள்ள பள்ளியில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். அந்த வகையில் கொட்டாரம், நாகர்கோவில் எஸ்.எல்.பி, தோவாளை, ஈத்தாமொழி அரசு மேல்நிலை பள்ளிகள், கருங்கல் பெத்லேகம் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, முன்சிறை, மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, திருவட்டார் அருணாச்சலம் மேல்நிலை பள்ளி, தக்கலை அரசு மேல்நிலை பள்ளி, குளச்சல் புனித மேரி மேல்நிலை பள்ளி ஆகிய இடங்களில் இந்த தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது.

Related Stories:

>