ராமநாதபுரத்தில் திடீர் மழை

ராமநாதபுரம், ஏப்.12: ராமநாதபுரத்தில் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்தது. வளி மண்டல வெப்ப சலனத்தால்  தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு அறிவித்தது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம், பாம்பன், ஆர்.எஸ். மங்கலம், வாலாந்தரவை உள்ளிட்ட பகுதிகளில் நேற்றுமுன் தினம் மழை பெய்தது. இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. இதனால் இரவு நேர புழுக்கத்தால் மக்கள் தூக்கமிழந்தனர். இந்நிலையில் ராமநாதபுரம் பாரதி நகர், புதிய பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை 20 நிமிடம் பெய்தது. இந்த மழையில் நனைந்தவாறே இருசக்கர வாகன ஓட்டிகள் பயணித்தனர். சிறிது

நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரித்தது.

Related Stories: