ஊத்துக்குளி அருகே இலவச கால்நடை மருத்துவ முகாம்

திருப்பூர், ஏப்.9:  ஊத்துக்குளி அருகே கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சார்பில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியம் தேவம்பாளையம் கிராமத்தில் தமிழக கால்நடை பராமரிப்பு துறையும் ஜே.கே.கே.முனிராஜா வேளாண்மை அறிவியல்  கல்லூரி ஆகியவை இணைந்து இலவச கால்நடை மருத்துவ முகாமை நடத்தின. இந்த முகாமில் திருப்பூர் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் மருத்துவர் பரிமல்ராஜ்குமார், உதவி மருத்துவர்கள் சோமசுந்தரம், ஆதியூர் மருத்துவர் தென்கார்திகை, குன்னத்தூர் மருத்துவர் சக்திவேல் உள்ளிட்ட மருத்துவர்கள் பங்கேற்று ஆடு, மாடுகளுக்கு குடற்புழு நீக்கம், சினை ஆய்வு, சினை ஊசி, ஆண்மை நீக்கம், ஊட்டச்சத்து மருந்து மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தனர். இதில் 50 மாடுகள், 100 ஆடுகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட கோழிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: