கிடா வெட்டு விருந்துக்கு வந்த போது கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி

சூலூர், ஏப். 9 :  கிடா வெட்டு விருந்தில் பங்கேற்க வந்தவர் மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். சூலூரையடுத்த சுல்தான்பேட்டை ஒன்றியம் வடவள்ளி ஊராட்சிக்குட்பட்ட தொட்டிபாளையம் பகுதியில் உள்ள கிணற்றில் ஆண் சடலம்  இறந்து, மிதந்ததாக நேற்று முன்தினம் சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்ஐ பிரபாகரன் தலைமையில் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர் கோவை டாடாபாத் அழகப்பா வீதியைச்சேர்ந்த சவரத்தொழிலாளி மந்திராசலமூர்த்தி(45) என்பதும், தொட்டிபாளையத்தில் உள்ள குலசாமி கோவிலுக்கு கிடாவெட்டு விருந்திற்கு வந்தவர் என்பதும் தெரியவந்தது. கிடாவெட்டுக்கு வந்தவர் மது அருந்தி போதையில் அருகிலிருந்த  கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார்  அடையாளம் தெரியாத சடலம் என்று வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இறந்தவர் அடையாளம் தெரிந்ததால் வழக்கு மாற்றம் செய்யப்பட்டு பிரேதபரிசோதனைக்குப் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: