பறக்கும் படை சோதனையில் ₹86,500 பறிமுதல்

விருத்தாசலம், மார்ச் 5: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பணம், உணவு மற்றும் பரிசு பொருட்களை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள ராஜேந்திரபட்டினத்தில் விருத்தாசலம்-ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி விருத்தாசலம் சமூகநல தாசில்தார் செந்தில்குமார் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஜெயங்கொண்டத்திற்கு லாரியில் சென்ற தர்மன் என்பவரிடம் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் ரூ.86 ஆயிரத்து 500 ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் விருத்தாசலம் தாசில்தார் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து சார்நிலை கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது. பணத்திற்கான உரிய ஆவணத்தை காண்பித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு அவரிடம் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Related Stories:

>