நயினார்கோவில் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் தீவிர பிரசாரம்

பரமக்குடி, ஏப். 6:  பரமக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் முருகேசன் நேற்று நயினார்கோவில் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மணக்குடி, கலாவூர், ஆத்தங்குடி, மருதூர், குன்றத்தூர், பொட்டகவயல், அரசனூர், அகரம் உள்ளிட்ட 25 கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது முருகேசன் பேசுகையில், ‘திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் தள்ளுபடி, ஆடு மாடு தொழில் புரியும் மகளிர்களுக்கு 30% மானியம், வைகை -காவிரி குண்டாறு இணைப்பு திட்டம். வைகை கரையோரங்களில் சிமெண்டு அமைத்து கரையை மேம்படுத்துதல், நெசவாளர்களுக்கு இலவசமாக 300 யூனிட் மின்சாரம் இலவசம், பசுமை வீடு,  போக்குவரத்து பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், உயர்கல்வி பயிலும் 30 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு தமிழக அரசே பணம் செலுத்தும், தமிழகத்தில் 5.50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் உள்ளிட்ட அனைத்து அறிவிப்புகளும் நிறைவேற்றப்படும்’ என்றார். பிரசாரத்தில் முன்னாள் அமைச்சர் சுந்தரராஜ், மாநில தீர்மான குழு துணை தலைவர் திவாகர், முன்னாள் மாநில இளைஞரணி துணை செயலாளர் சம்பத், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் குமரகுரு, ஒன்றிய பொறுப்பாளர்கள் சக்தி, அண்ணாமலை, ஒன்றிய கவுன்சிலர் நாகநாதன்,  காங்கிரஸ் வட்டார தலைவர் ஜோதிதாசன், தொமுச அரசமணி, ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் வளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: