வியாபாரிகள் மகிழ்ச்சி புதுக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானுக்கு பொதுமக்களிடம் வரவேற்பு இல்லை

புதுக்கோட்டை, மார்ச் 30: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால் ஆளும் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலருக்கு பொதுமக்கள் மத்திய பெரிய வரவேற்பு இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. பல இடங்களில் தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாக வேறு வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டு உள்ளதால் பல இடங்களில் வேட்பாளர்களை மாற்றக் கோரி போராட்டங்களும் நடைபெற்றது. மேலும் பல இடங்களில் பிரச்சாரத்திற்கு தொண்டர்கள் மற்றும் கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று கூறப்படுகிறது.

குறிப்பாக கார்த்திக் தொண்டைமானுக்கு பொதுமக்களிடம் வரவேற்பு இல்லை என்று ஆளும் கட்சி நிர்வாகிகளே முனுமுனுத்து வருகின்றனர். இது தொடர்பாக ஆளும் கட்சி நிர்வாகிகள் கூறியதாவது : புதுக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் கடந்த 2012 ம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து 4 ஆண்டு காலத்தில் பொதுமக்களுக்கு எதுவும் செய்யாத காரணத்தால் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். இதன்பிறகு 5 ஆண்டு காலம் தொகுதியில் எந்த பணிகளும் செய்யாமல் அமைதியாக இருந்தார். தற்போது மேலிடத்தில் உள்ள தனது செல்வாக்கை பயன்படுத்தி இந்த தேர்தலில் போட்டியிட சீட் பெற்றுள்ளார்.

கடந்த சில நாட்களாக புதுக்கோட்டை நகர் மறறும் புதுக்கோட்டை ஒன்றிய பகுதியில் வாக்கு சேகரித்து வருகிறார். ஆனால் இவர் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் பெரிய அளவில் வரவேற்பு அளிப்பது இல்லை. கட்சியினர் தான் வரவேற்பு அளிக்கின்றனர். பொதுமக்கள் வரவேற்பு இல்லாத காரணத்தால் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் கூட்டம் சேருவது இல்லை. ஆளும் கட்சியின் நிர்வாகளும், கூட்டணி கட்சியினர் தான் உள்ளனர். இந்த நிலை தொடர்ந்து வெற்றி பெறுவதும் மிகவும் கடினம் என்று ஆளும் கட்சியை ேசர்ந்த நிர்வாகிகளே பலர் காது பட பேசி பேசிவருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: