திமுக தேர்தல் அறிக்கையை எடுத்துக்கூறி மு.பெ.சாமிநாதன் அனல் பறக்கும் பிரசாரம்

வெள்ளக்கோவில், மார்ச் 24: காங்கயம் தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் திமுகவின் தேர்தல் அறிக்கையை எடுத்துக் கூறி அனல் பறக்கும் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.  காங்கயம் தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் தெகுதிக்குட்பட்ட முத்தூர் பேரூராட்சி பகுதியான, காந்திநகர், ரங்கபையன்காடு, கணேசபுரம், சுப்பிரமணியபுரம், ஈஸ்வரன் கோவில் வீதி, பெருமாள் புதூர், வேப்பங்காடு, சமத்துவபுரம், மாதவராஜபுரம், சின்ன முத்தூர் பிரிவு உள்பட பல இடங்களில் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது, கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் எவ்வித நல்லதும் நடக்கவில்லை, அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர் கழிப்பிட வசதி, உள்ளிட்ட எவ்வித வசதிகளும் முறையாக கிடைக்கவில்லை, என தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்து வேட்பாளர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு குடிமகனின் வேண்டுதலுக்கு இணங்க தொலைநோக்கு திட்டத்துடன் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளார்கள். இதில் குடிநீர், சுகாதாரமான சாலை, சாக்கடை வசதி, கழிப்பிட வசதி அனைத்தும் சிறப்பான முறையில் செய்து தரப்படும். விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளது திமுக அரசுதான். மகளிர் மற்றும் நெசவாளர்களுக்கு என அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் திமுக தேர்தல் அறிக்கையில் நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். மேலும் குண்டடம் கிழக்கு ஒன்றியப்பகுதிக்குட்பட்ட பண்ணாடிபுதூர், தாளக்கரை, சடையபாளையம், பொண்ணங்காளி வலசு, சம்பந்தம்பாளையம் பிரிவு, காளிமேடு, ஓலப்பாளையம், ராஜீவ் நகர், கடலைகாட்டுப்புதூர், அமராவதிபாளையம், கலைஞர் நகர், குமாரபாளையம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட கிராமப்பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தார்கள். திமுக ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: