கம்பம் சட்டமன்ற தொகுதி அமமுக, மநீம வேட்பாளர்கள் பாளையத்தில் மனுத்தாக்கல்

உத்தமபாளையம், மார்ச் 19:  கம்பம் சட்டமன்ற தொகுதியில் அமமுக, மநீம வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். கம்பம் சட்டமன்றத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பா.சுரேஷ் போட்டியிடுகிறார். இவர், நேற்று உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேலிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அப்போது தேமுதிக, எஸ்டிபிஐ, ஏஐஐஎம் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். முன்னதாக கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம் ஆகிய ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.

Related Stories: