தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காஞ்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நீலகிரி, தேனி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 6ம் தேதி தேனி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும், ஆகஸ்ட் 7ம் தேதி நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Related Stories: