×

தேனியில் வருகிற 18ம் தேதி நடைபெற உள்ள மாநில விளையாட்டு போட்டியில் பங்கேற்க ஊர்க்காவல் படை வீரர்கள் தேர்வு

*வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் நடந்தது

வேலூர் : மாநில அளவிலான ஊர்க்காவல் படை வீரர்களுக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான சரக விளையாட்டு போட்டிகள் வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் 110 வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் தேனியில் வரும் 18 முதல் 20ம் தேதி வரை மாநில அளவிலான ஊர்க்காவல் படைவீரர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்கும் வேலூர் சரக அளவிலான ஊர்க்காவல் படைவீரர்களை தேர்வு செய்வதற்கான விளையாட்டு போட்டிகள் வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது.

போட்டிகளை ஏஎஸ்பி தனுஷ்குமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ஊர்க்காவல் படை வேலூர் சரக தளபதி வி.என்.டி.சுரேஷ் தலைமை தாங்கினார். ஏரியா கமாண்டர்கள் வேலூர் வி.எஸ்.குமரன், திருப்பத்தூர் வெங்கடேசன், ராணிப்பேட்டை விமல், திருவண்ணாமலை சங்கர், உதவி கமாண்டர் அர்ச்சனா சித்தார்த், ஆர்எஸ்ஐ பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இப்போட்டிகளில் ஆண், பெண் இருபிரிவினரும் பங்கேற்கும் வாலிபால், கபாடி போட்டிகளும், ஆண்கள் மட்டும் பங்கேற்கும் ஷாட்புட், பெண்கள் மட்டும் பங்கேற்கும் 50 மீட்டர் ஓட்டம், ஆண்களுக்கான 100 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ரிலே ஓட்டம் என போட்டிகள் நடந்தது.

தொடர்ந்து ஊர்க்காவல் படை அணிவகுப்பு நடந்தது. இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த 110 பேர் தேர்வு செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் தேனியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

Tags : Home Guard ,Theni ,Vellore Netaji Stadium ,Vellore ,
× RELATED விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல், ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்