சென்னை: தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் நேற்று மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று காலை ஆலோசனை நடத்தி விட்டு, நேற்று மதியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்தார். தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யும் திட்டம் செயல்பாட்டில் இருக்கும் போது, நேற்று மாலை 5 மணிக்கு மேல், திமுக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்கின்றனர். இது குழப்பத்தை விளைவிக்கும்.
காவிரி பிரச்னையில் திமுகவின் குழப்பத்தால் தான் தமிழ்நாட்டுக்கு பின்னடைவு ஏற்பட்டது. அதுபோல் அதிமுகவும் செயல்படுகிறது. ஜெயலலிதா எவ்வளவு உறுதியான முடிவு எடுப்பார்களோ, அதற்கு எதிராக தற்போதைய அதிமுக, கர்நாடகா பாஜவின் ஆதரவாக, பாஜ என்ன சொல்லுகிறதோ அதை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது. இதேபோல் தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகளால் பல குழப்பங்கள் ஏற்பட்டாலும், தமிழக நலனை பாதுகாக்க திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்படுகிறது.
கர்நாடகா அரசு கபினி அணையில் இருந்து, இப்போது திறந்து விட்ட தண்ணீர் நமக்கு போதுமானது இல்லை. நமக்கு கர்நாடக அரசு தரவேண்டிய தண்ணீர் 17 டிஎம்சி. ஆனால் மிகக் குறைவான, அவர்களின் உபரி தண்ணீரை தருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாடு முதலமைச்சர் சுமுகமாக தீர்வு காண்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் கர்நாடக முதலமைச்சர் சிவகுமார், திமுகவுடன் சேர்ந்து கொண்டு எதிர்ப்பாக செயல்பட்டார். இந்நிலையில் தமிழக முதலமைச்சர், தனிமையாக நிற்கிறார் என்று ஸ்டாலின் கூறுகிறார்.
எனவே வேறு வழியில்லாமல் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்கிறது. கர்நாடகாவில் அனைத்துக் கட்சிகளும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விடக்கூடாது என்ற ஒரே நிலைப்பாட்டில் இருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு நிலைப்பாட்டில் உள்ளன. சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளை வைத்துக்கொண்டு தீர்மானத்தை நிறைவேற்றினோம். ஆனால் அடுத்த நாளே அதிமுக தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிப் பேசினார்கள்.
சட்டசபையில் ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, அதிமுக உயர் நீதிமன்றத்தில் தனியாக ஒரு வழக்கு தொடர்கிறது. இதையடுத்து இப்போது, திமுக உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்து உள்ளது. இதனால் தமிழக மக்களுக்கு தான் பின்னடைவு ஏற்படும். கர்நாடக முதலமைச்சரிடம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுங்கள் என்று காங்கிரஸ் அகில இந்திய தலைமை கூறினாலும் அவர் அதைக் கேட்டு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடும் நிலையில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
* 200 யூனிட் மின்சாரம் இலவச திட்டத்தில் மாற்றம் இல்லை
தமிழ்நாட்டில் 200 யூனிட்டுகள் மின்சாரம் இலவசம் என்ற திட்டத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. சிலர் தேவை இல்லாமல் அதில் குழப்பத்தை விளைவித்து வருகின்றனர். சில இடங்களில் அபார்ட்மென்ட் குடியிருப்புகளில் காமன் கனெக்சன்கள், கமர்சியலாக இருக்கிறது. அதற்கு வரும் கட்டணங்களை எடுத்து சிலர் போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
அவைகளை எல்லாம் கணக்கீடு செய்து இப்போது மாற்றம் செய்து கொண்டு இருக்கிறோம். 15,000 கணக்கீடுகளை சரிபார்த்ததில் 100 கணக்குகளுக்கு மட்டும் வித்தியாசம் தெரிகிறது. இதுபோல் 3 லட்சத்து 70 ஆயிரம் மின் இணைப்புகளையும், வாரியம் கணக்குகளை சரிபார்த்து வருகிறது. எனவே தேவையில்லாமல் பொதுமக்களுக்கு இதுபோல் குழப்பத்தை விளைவிக்க வேண்டாம் என அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
