திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 86,231 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 32,017 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உள்ள உண்டியல்களில் ரூ.3.74 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். பக்தர்களுக்கு 4.73 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. 2.47 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளில் காத்திருக்கும் பக்தர்கள் சுமார் 10 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்கின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரமும், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 5 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.
