தீரன் சின்னமலை நினைவு நாள் மு.க.ஸ்டாலின் மரியாதை

 

சென்னை: விடுதலை வீரர் தீரன் சின்னமலையின் 221வது நினைவுநாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வரும் 3ம் தேதி (நாளை) காலை 10.30 மணியளவில், சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

இந்நிகழ்வில், திமுக முன்னாள் அமைச்சர்கள், இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு மாவட்ட தோழர்களுக்கு, சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories: