தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள்: ராகுல்காந்தி பேட்டி

 

சென்னை: டெல்லி புறப்படும் முன்பு ராகுல்காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ் மக்கள், தமிழ் மொழி மற்றும் தமிழ்நாடு மாநிலம் ஆகியவற்றுக்கு எதிராக, தொகுதி மறுவரையறை செய்வதற்கான முயற்சியை பாஜ மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டு மக்களின் அதிகாரத்தைப் பறிப்பதற்கும், அவர்களின் வாக்குரிமையின் முக்கியத்துவத்தை குறைப்பதற்குமாகவே இந்த மறுவரையறை திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது பாஜவின் ஒரு சதியாகும். தொகுதி மறுவரையறையை ஆதரிக்கும் எவரும் தமிழ்நாட்டிற்கும் அதன் எதிர்காலத்திற்கும் துரோகம் இழைக்கிறார்கள். அத்துடன் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜ அமைப்புகள் தமிழ்நாட்டு மக்கள் மற்றும் மாநிலத்தின் எதிர்காலம் மீது தாக்குதல் நடத்த வழிவகுக்கிறார்கள். அவர்கள் ‘எட்டப்பன்’ ஆவர். எந்தவொரு தமிழரும் தொகுதி மறுவரையறையை ஆதரிக்கக் கூடாது. ஒவ்வொரு தமிழரும் இதனை எதிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: