மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம்; சென்னையில் 20 விமானங்கள் 5 மணிநேரம் வரை தாமதம்: பயணிகள் கடும் அவதி

 

சென்னை: அமெரிக்கா- ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளிகளை கடந்து செல்லும், பல்வேறு நாடுகளின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் பல்வேறு விமானங்கள் பலமணி நேரம் வரை தாமதமானது.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12.45 மணிக்கு அபுதாபியில் இருந்து சென்னை வரவேண்டிய ஏர் அரேபியா விமானம், நேற்று அதிகாலை 2.25 மணிக்கும், அதிகாலை 1.10 மணிக்கு அடிஸ் அபாபாவில் இருந்து சென்னை வரவேண்டிய எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் அதிகாலை 2.15 மணிக்கும், அதிகாலை 2.30 மணிக்கு துபாயிலிருந்து சென்னை வரவேண்டிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் அதிகாலை 4.40 மணிக்கும், அதிகாலை 3.25 மணிக்கு சார்ஜாவில் இருந்து சென்னை வர வேண்டிய ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் காலை 7.40 மணிக்கும், அதிகாலை 4.25 மணிக்கு அபுதாபியில் இருந்து சென்னை வரவேண்டிய ஏர் அரேபியா விமானம் காலை 9.40 மணிக்கும் என மொத்தம் 10 விமானங்கள் தாமதமாக வந்து சேர்ந்தன.

இதேபோல், சென்னையில் இருந்து மேற்கண்ட நாடுகளுக்கு புறப்பட்டு செல்லும் 10 விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன. ஒவ்வொரு வருகை மற்றும் புறப்பாடு விமானங்களும் ஒரு மணி நேரத்தில் இருந்து 5 மணி நேரம் வரை தாமதமாக சென்னைக்கு வந்துவிட்டு, தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.

Related Stories: