சென்னை: மக்களின் வாக்குகளை பறிப்பதற்காகவே தொகுதி மறுவரை மசோதா கொண்டு வர பாஜக திட்டம் என ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார். தமிழர்கள் யாரும் தொகுதி மறுவரை மசோதாவை ஆதரிக்க கூடாது. மேகதாது பிரச்சனை, பாஜகவை தவெக நேரடியாக எதிர்க்காதது உள்ளிட்ட கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். எந்தக் கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் ராகுல்காந்தி புறப்பட்டுச் சென்றார்.
