தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு: கன்னட அமைப்பினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

பெங்களூரு: காவிரி நீர் பிரச்னையால் தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்க்கு எதிராக கர்நாடகாவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம், தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு தினசரி 3,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கர்நாடகாவின் மண்டியா மற்றும் காவிரி பாசனப் பகுதிகளில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதில், தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்யின் அரசியல் நிலைப்பாட்டைக் கண்டித்து, கர்நாடகாவில் ‘தமிழக முதல்வர் விஜய்யே திரும்பிப் போ’ என்ற முழக்கத்துடன் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

குறிப்பாக, விஜயா சேனா மற்றும் கருநாடா விஜயா சேனா அமைப்பினர் மண்டியாவில் உள்ள குரு திரையரங்கை முற்றுகையிட்டு, விஜய் நடிப்பில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் விளம்பரப் பலகைகளைக் கிழித்து எறிந்து, காட்சிகளையும் வலுக்கட்டாயமாக ரத்து செய்ய வைத்தனர். மேலும், பழைய பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலையில் விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் சாலை மறியல் மற்றும் தீப்பந்தப் போராட்டங்களை நடத்தி போக்குவரத்தை முழுமையாக முடக்கினர்.

கிருஷ்ணராஜ சாகர் அணையை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களைத் தடுக்க அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநிலத்தில் மக்கள் கொந்தளிப்பு அதிகமாக இருப்பதால், தமிழக முதல்வர் விஜய் தனது பெங்களூரு பயணத்தை ஒத்திவைக்குமாறு கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: