சென்னை: மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சு நடத்துவது பயனளிக்காது என்று முதலமைச்சரிடம் எச்சரித்தோம் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என முதல்வர் நினைத்தாரோ என்னவோ. தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்து தனிமைப்பட்டு நிற்கிறார் முதல்வர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
