கடிதம் எழுதினால் புத்தகங்களை வழங்கத் தயாராக இருக்கிறோம்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ‘பாளையங்கோட்டை சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்காகவும், தாம்பரத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நூலகத்துக்காகவும் மேலும் 5 ஆயிரம் புத்தகங்களை இன்று வழங்கினேன். புத்தகங்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்கள், நூலகத்தினர், படிப்பகத்தினர் கடிதம் எழுதினால் அவர்களுக்கும் புத்தகங்களை வழங்கத் தயாராக இருக்கிறோம்’ என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவரின் பதிவில்; “கற்றனைத்து ஊறும் அறிவு

2018-இல் தி.மு.க. தலைவராகப் பொறுப்பேற்றதில் இருந்து, என்னைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, சால்வைகளுக்குப் பதிலாகப் புத்தகங்களையே அன்பளிப்பாக வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

இதுவரை இப்படி பெறப்பட்ட 6 இலட்சம் நூல்களைத் தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள நூலகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்.

இதன் தொடர்ச்சியாக, பாளையங்கோட்டை சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்காகவும், தாம்பரத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நூலகத்துக்காகவும் மேலும் 5 ஆயிரம் புத்தகங்களை இன்று வழங்கினேன்.

புத்தகங்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்கள், நூலகத்தினர், படிப்பகத்தினர் கடிதம் எழுதினால் அவர்களுக்கும் புத்தகங்களை வழங்கத் தயாராக இருக்கிறோம்.

வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு தன் அடையாளத்தை இழக்காமல் பாதுகாக்கப்படும்!” என தெரிவித்துள்ளார்.

Related Stories: