அசாதாரண சூழல்களை தவிர மற்ற நேரங்களில் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி

 

புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக டெல்லியில் கரப்பான் பூச்சி இயக்கத்தின் சார்பாக போராடிய மாணவர்களை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் ரப்பர் குண்டு துப்பாக்கியால் சுட்டும் கலைத்தனர். இந்த நிலையில் போராட்டங்களின் போது பெல்லட் குண்டுகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில்,‘‘டெல்லி மாணவர்கள் போரட்டத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும்.

குறிப்பாக பெல்லட் குண்டுகளை முக்கியமான அசாதாரண சூழல்களை தவிர மற்ற நேரங்களில் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. குறிப்பாக டெல்லி போராட்டத்தின் போது மாணவர்கள் மீது எந்தவிதமான ஆயுதம் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து காவல்துறை விளக்கமளிக்க வேண்டும். பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தை உச்ச நீதிமன்றம் விரிவாக விசாரணை நடத்த தயாராக இருக்கிறது என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories: