கால்நடை மருத்துவ படிப்புக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு

 

சென்னை: தமிழகத்தில் சென்னை, நாமக்கல் உள்பட 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2026-27) பிவிஎஸ்சி, பிடெக் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த மே 25 முதல் ஜூன் 23ம் தேதி வரை ஆன்லைனில் பெறப்பட்ட விண்ணப்பங்களின்படி மொத்தம் 20 ஆயிரத்து 134. இந்நிலையில், பிவிஎஸ்சி, பிடெக் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியலையும், ஒவ்வொரு படிப்பிலும் முதல் 5 இடங்களை பிடித்த மாணவர்களின் பட்டியலையும் சென்னை தலைமைச் செயலகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கமலி நேற்று வெளியிட்டார்.

பிவிஎஸ்சி படிப்புக்கான தரவரிசையில் விழுப்புரம் மாணவி ஷாலினி முதலிடத்தையும், கடலூர் மாணவி யாஷிகா 2ம் இடத்தையும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவி மெர்லின் 3ம் இடத்தையும், அரியலூர் மாணவர் ஜனகன் 4ம் இடத்தையும், கடலூர் மாணவி திவ்யா வர்ஷினி 5ம் இடத்தையும் பிடித்தனர். மாணவர்கள் தங்கள் வரிசையை https://tanuvas.ac.in. என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தரவரிசையில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதுதொடர்பாக ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 2 வரை முறையிடலாம். 044-29997349 29997348 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். அல்லது admission@tanuvas.org.in என்ற மின்னஞ்சலுக்கும் தகவல் தெரிவிக்கலாம்.

Related Stories: