கொத்தனார் வேலைக்கு கூட அனுபவம் தேவை தவெக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகிறது: அதிமுக மாஜி அமைச்சர் பரபரப்பு பேச்சு

புவனகிரி: கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை கடல் பகுதியில் இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்பிலரேஷன் நிறுவனம் சார்பில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் சேர வைத்து குதிரை பேர ஆட்சி நடத்தி வரும் த.வெ.க அரசை கண்டித்தும் பரங்கிப்பேட்டையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது: 108 எம்எல்ஏக்களை பெற்று பெரும்பான்மை இல்லாததால் ஒவ்வொரு கட்சி ஆபீஸ்ல்லாம் விஜய் சென்றார். திமுக கூட்டணி கட்சியினரை வைத்து ஆட்சி நடத்துகிறார். இது மானங்கெட்ட பொழப்பு. பட்டப்பகலில், வெட்ட வெளிச்சத்தில் சட்டத்தை மீறி, விதிகளை மீறி, குதிரை பேரமா, கழுதை பேரமா, சாக்கடை பேரமா, காக்கா பேரமா, குருவி பேரமா, என்ன எழவு பேரமோ தெரியவில்லை. அதிமுக எம்எல்ஏக்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதை கண்டு நாடே, இன்றைக்கு சந்தி சிரிக்கிறது.

மேகதாது விவகாரத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் விஜய் இப்பதான் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். அவர் என்ன எழுதி இருக்காரு, நீங்க தெரிஞ்சுக்கோங்க. ஒன்றிய அமைச்சர் பேசினதை வாபஸ் வாங்கணும் என்று எழுதினார். முட்டாள் முதல்வரே, ஒன்றிய அமைச்சர் பேசுவதை வாபஸ் வாங்க தேவையில்லை. மேகதாது அணை கட்ட வேண்டும் என்கிற அந்த தீர்மானத்தை, அந்த முடிவை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்.

இல்லையென்றால், தமிழகம் தக்க பாடம் புகட்டும் என்று சொல்ல வேண்டும். இந்த கடிதம் எழுத மூணு மாசம் ஆச்சு. தவெக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. இந்த ஆட்சி நீடிக்காது. கொத்தனார் வேலைக்கு கூட அனுபவம் தேவை. முதல்வர் விஜய்க்கு எந்த அனுபவமும் இல்லை. ஹெட்ரோகார்பன் திட்டத்தை தவெக அரசு அனுமதித்தால் அதிமுக கடுமையாக போராடும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: