மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ரூ.60 கோடி நில மோசடி விசாரணை நடத்த தனிப்படை அமைப்பு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.60 கோடி நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக முன்னாள் தாசில்தார், சார்பதிவாளர் உட்பட 19 பேர் மீது மோசடி மற்றும் கூட்டுச்சதி ஆகிய பிரிவுகளின் கீழ் மதுரை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க 2 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் இரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தனிப்படையினர் மீனாட்சி அம்மன் கோயில் கட்டளை நிலம் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். முதல்கட்டமாக கட்டளை நிலத்தின் தற்போதைய நிலை, முதலில் பட்டா வழங்கப்பட்டது, பட்டா வழங்க துணையாக இருந்த மதுரை வடக்கு தாலுகா அப்போதைய தாசில்தார் மற்றும் விஏஓக்கள் ஆகியோரிடம் விசாரிக்கவும், கட்டளை ஏற்படுத்திய புதுக்கோட்டை ராஜகுமார் துரைராஜாவின் வாரிசுகள் தரப்பினரையும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மேல் கட்ட விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: