கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் சிலை அமைக்க டெல்லி குழு ஆய்வு

ஜெயங்கொண்டம்: கங்கைகொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்த ராஜேந்திர சோழனின் பிரமாண்ட சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்நிலையில் ஜெயங்கொண்டம் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு டெல்லி இந்திராகாந்தி தேசிய கலை மையத்தின் நிர்வாக மற்றும் கல்வித்தலைவர் சச்சிதானந்தம் ஜோஷி தனது குழுவினருடன் நேற்று வந்தார்.

ராஜேந்திர சோழனின் சிலையை எங்கு, எவ்வாறு அமைக்க வேண்டும் என குழுவினருடன் கலந்தாலோசித்தார். ராஜேந்திர சோழன் 32 ஆண்டுகள் அரசனாக ஆட்சி செய்ததால் சிலை அமைப்பு அனைத்தும் 32 என்ற விகிதத்தில் அமையவுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே சோழகங்கம் ஏரிக்கரையில் ராஜேந்திர சோழனின் சிலையை அமைக்க வேண்டுமென கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழு தலைவர் மோகன் வலியுறுத்தி உள்ளார்.

Related Stories: