சமதள பகுதிகளில் அமைந்துள்ள அனுமதியற்ற மனைபிரிவுகளை வரன்முறைப்படுத்த வாய்ப்பு

சென்னை: சமதள பகுதிகளில் அமைந்துள்ள அனுமதியற்ற மனை பிரிவுகளை வரன்முறைப்படுத்திக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகர் ஊரமைப்பு ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: சமதள பகுதிகளில், 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனை பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத மனை மற்றும் மனை பிரிவுகளை வரன்முறைப்படுத்த திட்டமிடப்பட்டது.

இதையடுத்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை 04.05.2017ல் வெளியிடப்பட்டு இணையதளம் வழியாக விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 30.06.2027 வரை நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க https://tcponline.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து பயனடையலாம். ஆகையால், பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, சமதள பகுதிகளில் அமைந்துள்ள அனுமதியற்ற மனை பிரிவுகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: