தமிழகத்தில் 31ம் தேதி வரை வெப்பம் 2-4 டிகிரி செல்சியஸ் கூடும்

 

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒருசில இடங்களில் மழை பெய்த போதும், அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-5டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. மேலும் மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், மதுரை விமானநிலையம், மதுரை நகரம், பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, திருச்சி, வேலூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் 31ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகும்.

 

Related Stories: