விருகம்பாக்கம் 128வது வார்டில் மகளிர் உடற்பயிற்சி கூடத்திற்கு ரூ.8 லட்சத்தில் உபகரணங்கள்: மாமன்ற உறுப்பினர் ரத்னா லோகேஸ்வரன் ஆய்வு

சென்னை: விருகம்பாக்கம் இளங்கோ நகரில் மகளிர் உடற்பயிற்சி கூடத்துக்கு ரூ.8 லட்சத்தில் புதிய நடைபயிற்சி உபகரணங்கள் மற்றும் சைக்கிளிங் உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது. இதை மகளிர் பயன்பாட்டிற்காக மாமன்ற உறுப்பினர் ரத்னா லோகேஸ்வரன் வழங்கி தொடங்கி வைத்தார். மேயர் பிரியா சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் மகளிருக்கான உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படவேண்டும் என்ற அறிவிப்பிற்கிணங்க, விருகம்பாக்கம் 128வது வார்டில் இளங்கோ நகரில் புதிதாக மகளிருக்கான உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. மாமன்ற உறுப்பினர் ரத்னா லோகேஸ்வரன் உடற்பயிற்சி கூடத்திற்கு ஆய்வுக்கு சென்றபோது, உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த மகளிர் அனைவரும் கூடுதலாக நடைபயிற்சி செய்ய உபகரணங்கள், சைக்கிளிங் செய்ய உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும்படி மாமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர்.

மகளிரின் கோரிக்கையை ஏற்று அதிகாரிகளை அழைத்து வந்து ஆய்வு செய்து கூடுதலாக உடற்பயிற்சி உப கரணங்கள் வாங்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. புதிதாக வாங்கப்பட்ட அனைத்து உபகரணங்களும் TREADMILL -2, FE-60 MAGNETIC CROSS TRAINER -1, MULTI DUMBELL RACK-2, AFTON GYM MAT-6, DUAL INNER THIAG AND OUTER THIGH-1, பொருத்தப்பட்டது. இதையடுத்து புதிய உபகரணங்கள் பொருத்தப்பட்டு மகளிர் உடற்பயிற்சி செய்வதை மாமன்ற உறுப்பினர் ஆய்வு செய்தார். மகளிர் அனைவரும் மாமன்ற உறுப்பினர் ரத்னா லோகேஸ்வரனுக்கு நன்றி தெரிவித்தனர்.

விருகம்பாக்கம் 128வது வார்டு லஷ்மி நகரில் இயங்கி வரும் சிறுவர் விளையாட்டுத் திடலை மேம்படுத்த பெண்கள், சிறுவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று ரூ.3.50 இலட்சத்தில் சிறுவர்கள் விளையாடுவதற்கு ஏதுவாக விளையாட்டு உபகரணங்கள், இறகுப் பந்து கோர்ட்டை தனது மாமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ஒதுக்கி விளையாட்டு திடலை மேம்படுத்தினார். மேம்படுத்தப்பட்ட விளையாட்டு திடலை பள்ளி வாசல் மாணவ சிறுவர்களை வைத்து பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் மாமன்ற உறுப்பினர் ரத்ன லோகேஸ்வரன் அவர்கள் இந்நிகழ்வில் வட்ட கழக செயலாளர்கள் மு.கோவிந்தராசன், வழக்கறிஞர் வி.ஏ.ராஜா, நசீர் பாய், வழக்கறிஞர் செந்தில், மு.பரந்தாமன், உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: