வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி பாண்டேபூரில் உள்ள சரீன் சோனி ப்ளே ஸ்கூலில் நர்சரி வகுப்பு படிக்கும் தனது 5 வயது மகன், ஜூலை 24 அன்று வீடு திரும்பியபோது தனது பிறப்புறுப்பில் வலி இருப்பதாக தெரிவித்ததாக தந்தை கேசரி ஜெய்ஸ்வால் தெரிவித்தார். சோதித்துப் பார்த்தபோது, குழந்தையின் பிறப்புறுப்பில் கொப்புளம் இருந்ததை தாய் கண்டறிந்ததாக அவர் கூறினார்.
கழிவறையைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதால் சிறுவன் தனது ஆடையில் சிறுநீர் கழித்ததாகவும், அதற்காக ஆசிரியை பிரீத்தி குஷ்வாஹா, சிறுவனை மற்றொரு அறைக்கு அழைத்துச் சென்று, கேஸ் அடுப்பில் கத்தியைச் சூடாக்கி, அதைக் கொண்டு சிறுவனின் பிறப்புறுப்பைச் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிறுவனின் தந்தை கேசரி ஜெய்ஸ்வால் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் ஆசிரியை பிரீத்தி குஷ்வாஹா, பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளி முதல்வர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
