பள்ளி பாடப்புத்தகங்களில் 2,000 பிழைகள் ஒடிசா பள்ளி கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்: பிஜூ ஜனதா தளம் வலியுறுத்தல்

 

புவனேஷ்வர்:ஒடிசா மாநிலத்தில் தற்போது மோகன் சரண் மாஜி தலைமையிலான பாஜ ஆட்சி செய்து வருகிறது. இங்கு பள்ளி கல்வித்துறை அமைச்சராக நித்யானந்த கோண்ட் பதவி வகித்து வருகிறார். இங்கு 2026-27ம் கல்வியாண்டுக்கான 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பாடநூல்களில் 2,000க்கும் மேற்பட்ட பிழைகள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக, உலக புகழ் பெற்ற விஞ்ஞானியான சர் ஐசக் நியூட்டன் ஒரு விமானி என்றும், ஒடிசாவில் உள்ள நியாம்கிரி மலைகள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருப்பதாகவும் பல்வேறு பிழைகள் இடம்பெற்றுள்ளன.

இதேபோல், ஒடிசா சட்டப்பேரவை படத்துக்கு பதிலாக கர்நாடக சட்டப்பேரவையின் படம், கோனார்க் சூரிய கோயில் குறித்த பாடத்தில் கர்நாடக மாநிலம் ஹம்பியில் உள்ள விஜய விட்டலா கோயில் படம் என பிழைகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், எழுத்து பிழைகள், இலக்கண பிழைகளும் உள்ளன. இந்த சூழலில் அரசு பள்ளி பாடப்புத்தக பிழைகளுக்கு பொறுப்பேற்று ஒடிசா பள்ளி கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சியான பிஜூ ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக் வலியுறுத்தி உள்ளார்.

Related Stories: