உத்தவ் தாக்கரேவுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

 

சென்னை: சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: மும்பையின் சிவாஜி பூங்காவில் நேற்று முன்தினம் திரண்டு வந்து மக்கள் காட்டிய பேராதரவு என்பது, தங்களைப் பலவீனப்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு முயற்சியும் தங்கள் பக்கம் நிற்க மக்களின் உறுதியை மேலும் வலுப்படுத்தவே செய்திருக்கிறது என்பதை ஆணித்தரமாக நினைவூட்டியுள்ளது. நல்ல உடல்நலத்தோடும், தங்களின் தளராத போராட்ட குணத்தோடும் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற விழைகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Related Stories: