பழைய ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில் மோதியதில் 9 ஆடுகள் பலி

ஈரோடு : ஈரோட்டில் நேற்று மதியம் பயணிகள் ரயில் மோதி 9 ஆடுகள் உயிரிழந்தன.ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் அருகே நேற்று மதியம் சில ஆடுகள் அங்கிருந்த தண்டவாளத்தை கடக்க முயன்றன. அப்போது, அந்த வழியாக வந்த பயணிகள் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஆடுகள் மீது மோதியது.

இதில், 9 ஆடுகள் அதே இடத்தில் பலியாகின. தகவல் அறிந்து ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படையினர் அங்கு சென்று ஆடுகளின் உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடுகள் பலியானதை பார்க்க பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. லேசான காயமடைந்த ஆடுகளை சிலர் இருசக்க வாகனத்தில் தூக்கி சென்றதாக தகவல் பரவியுள்ளது.

Related Stories: