அருணாச்சலபிரதேசத்தில் சீன ராணுவம் ஊடுருவல்? மாநில அரசு மறுப்பு

இடாநகர்: அருணாச்சலபிரதேசத்தில் இந்தியா, சீனா இடையே 1,129 கிமீ நீளமுள்ள எல்லைப்பகுதி உள்ளது. இந்த தெற்கு திபெத் என சொந்தம் கொண்டாடும் சீனா, அருணாச்சலபிரதேசத்தை ஜாங்னான் என்று பெயரிட்டு அழைத்து வருகிறது. இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் இந்தியா, அருணாச்சலபிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத மற்றும் ஒருங்கிணைந்த பகுதி என்பதை மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வருகிறது.

இந்த சூழலில் அருணாச்சலபிரதேசத்தின் அப்பர் சுபான்சிரி மாவட்டத்தின் தக்சிங் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்ததாக சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. இதற்கு அருணாச்சலபிரதேச அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.  இதுகுறித்து நேற்று பேட்டியளித்த அம்மாநில உள்துறை அமைச்சர் மாமா நதுங், “அருணாச்சலபிரதேசத்தின் எந்த பகுதியிலும் சீன ராணுவம் அத்துமீறி நுழையவில்லை. சீனாவால் எந்த அத்துமீறலும் நடக்கவில்லை. இவை அனைத்தும் வெறும் பொய்கள், சமூக ஊடக வதந்திகள். நமது ராணுவ வீரர்கள் தொடர்ந்து எல்லையை பாதுகாத்து வருகின்றனர் ” என்றார்.

Related Stories: