சென்னை: கவரப்பேட்டை அடுத்த படம்பாக்கத்தை சேர்ந்தவர் அனுஷ்கா(19), மணலியைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி (18).இவர்கள் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இவர்களின் உடற்கூறாய்வு ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்தது. ஒரே நிற சுடிதார், உடல் அளவும் ஒன்றாக இருந்ததால் அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்பட்டு சடலங்கள் உறவினர்களிடம் மாற்றி ஒப்படைக்கப்பட்டது.
இறுதி சடங்கு செய்யும்போது தான் பிரியதர்ஷினியின் உறவினர்கள் சடலம் மாறியதை அறிந்தனர். மாற்றி கொடுக்கப்பட்ட அனுஷ்கா உடலைஅரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஒப்படைத்தனர். பின், பிரியதர்ஷினியின் உடல் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
