போலீஸ் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி போலீசார், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்ற வழக்கை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர்கள் இருவரும் முன்ஜாமீன் பெற்றனர்.

போலீஸ்நிலையம் வந்தால், வேறு வழக்கில் கைது செய்வார்கள் அல்லது விசாரணை என்ற பெயரில் துண்புறுத்துவார்கள் என்று கருதிய செந்தில்பாலாஜி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பின்னர் இந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி சரணடைந்து ஜாமீன் பெற்றார். பின்னர், நேற்று காலை அவர் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி அங்கு உள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டார்.

Related Stories: