சபரிமலை கோயில் புதிய தந்திரி பிரம்மதத்தன்: தேவசம் போர்டு முடிவு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் முக்கிய பூஜைகள் அனைத்தும் செங்கணூர் தாழமண் என்ற குடும்பத்தைச் சேர்ந்த தந்திரிகளின் தலைமையில் தான் நடைபெறும். இந்தக் குடும்பத்தில் ஆண்கள் வழி வரும் ஆண் வாரிசுகள் தான் சபரிமலை தந்திரி பொறுப்பை ஏற்க முடியும். தற்போது சபரிமலை கோயிலில் மூத்த தந்திரியாக கண்டரர் ராஜீவரர் உள்ளார்.

இவரும், முன்னாள் தந்திரி கண்டரர் மோகனரின் மகனான மகேஷ் மோகனரும் தான் சபரிமலையில் பொறுப்பில் உள்ளனர். இவர்கள் இருவரும் 2 வருடங்களுக்கு ஒரு முறை சபரிமலையில் தந்திரி பொறுப்பை ஏற்பார்கள். தற்போது சபரிமலை தந்திரியாக மகேஷ் மோகனர் உள்ளார். இவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. ஆவணி மாதம் முதல் கண்டரர் ராஜீவரர் பொறுப்பேற்க வேண்டும்.

இந்நிலையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் தனக்குப் பதிலாக மகன் பிரம்மதத்தனை தந்திரியாக நியமிக்க வேண்டும் என்று கூறி தந்திரி கண்டரர் ராஜீவரர் திருவிதாங்கூர் கோரினார். இதைத் தொடர்ந்து புதிய தந்திரியாக பிரம்மதத்தனை நியமிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனுமதி அளித்தது.வரும் ஆவணி 1ம் தேதி முதல் சபரிமலை புதிய தந்திரியாக பிரம்மதத்தன் பொறுப்பேற்பார்.

Related Stories: