ராமதாஸ் பிறந்தநாள் முதல்வர் விஜய் எல்.முருகன் வாழ்த்து

சென்னை: முதல்வர் விஜய் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பல்லாண்டு வாழ உளமார வாழ்த்துகிறேன்.

எல்.முருகன்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘‘பாமக நிறுவனர் ராமதாஸுக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீண்ட ஆயுளுடனும், உடல்நலத்துடனும் சமூக நலப் பணிகளில் சேவையாற்றி, மகிழ்ச்சியுடன் வாழ பிரார்த்திக்கிறேன்’’ என கூறியுள்ளார்.

Related Stories: