மும்பை: எம்.எஸ்.தோனி, அனுஷ்கா சர்மா போன்ற பிரபலங்களுடன் நடித்த நடிகர் ஷேக்ஸ்பியர் திரிபாதி, கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடியால் ஆபாச படங்களில் நடிக்க தள்ளப்பட்டதாக அவரது சகோதரி லெஸ்லி திரிபாதி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, முன்னணி நடிகை அனுஷ்கா சர்மா மற்றும் வருண் தவான் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்த நடிகர் ஷேக்ஸ்பியர் திரிபாதி, கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் படப்பிடிப்புகள் அனைத்தும் முடங்கியதால் ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடி காரணமாக ஆபாச படங்களில் நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக அவரது சகோதரியும் எழுத்தாளருமான லெஸ்லி திரிபாதி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து இணையதள நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்து பேசிய லெஸ்லி திரிபாதி, ‘கொரோனா ஊரடங்கின் போது படப்பிடிப்புகள் இல்லாததால் வீட்டில் சலிப்படைந்த எனது சகோதரர், வருமானத்திற்காக படப்பிடிப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் ஆபாச படங்களில் நடிக்கத் தொடங்கியதை இணையதளத்தில் அவரது வீடியோக்கள் வெளியான பிறகே நாங்கள் அறிந்தோம். ஆரம்பத்தில் யாரோ அவரது புகைப்படங்களை வைத்து தவறாக உருவாக்கியுள்ளனர் என்று நினைத்து அவரிடம் கேட்டபோது, ‘இது போலி அல்ல, நான் தான் இந்த வேலையை செய்யத் தொடங்கியுள்ளேன்’ என்று கூறினார்.
இந்த உண்மை வெளியானது முதல் எங்கள் குடும்பத்தினர் கடுமையான இணையவழி கேலி சித்திரவதைகளுக்கும், வசவுகளுக்கும் ஆளானோம்; பலரும் எங்களது தந்தையையும் அவதூறாக விமர்சித்தனர். எவ்வளவு திறமை இருந்தாலும் சினிமா திரையுலகில் தொடர்ச்சியான வாய்ப்புகளும் நிதி பாதுகாப்பும் கிடைப்பது கடினம் என்பதற்கு எனது சகோதரரின் இந்த வாழ்வியலே சாட்சியாகும்’ என்று தெரிவித்துள்ளார்.
