*2.4 கிலோ பறிமுதல்: டிரைவர் கைது
அந்தியூர் : அந்தியூர் அருகே நெல் மூட்டை லாரியில் குட்கா கடத்திய டிரைவரை கைது செய்த போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ளது பர்கூர் மலைப்பகுதி. இங்குள்ள போலீஸ் சோதனை சாவடியில் நேற்று காலை போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடக மாநிலத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் காங்கயத்திற்குநெல் மூட்டைகள் ஏற்றிய லாரி வந்தது. அதனை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது தலையணையில் மறைந்து கடத்திய 2.4 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. குட்காவை பறிமுதல் செய்த போலீசார் லாரி டிரைவரான கடலூர் திட்டக்குடி மேல்எல்லம்பட்டியைச் சேர்ந்த இளையராஜா (27) என்பவரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.
