சேவலை ரத்த காவு கொடுத்த விஜய் ரசிகர் வானதி சீனிவாசன் கண்டனம்

சென்னை: பாஜ மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: திருச்சியில் ஜனநாயகன் திரைப்படம் காண வந்த ரசிகர் ஒருவர் கட்அவுட் முன்பாக சேவலை அறுத்து ரத்தம் தெறிக்க அதனை பேனரில் படும்படி செய்த காணொலியானது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது. இது கடும் கண்டனத்திற்குரியது.

ரசிகர்கள் தங்கள் அபிமான நட்சத்திரங்களின் படங்களைக் கொண்டாடுவதற்கு மரம் நடுவது, ஏழைகளுக்கு உதவுவது, அன்னதானம் கொடுப்பது என எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் அதையெல்லாம் விடுத்து தமிழ்நாட்டு கலாச்சாரத்தில் கடவுள்களுக்கு உகந்த சில செயல்களை, நம்பிக்கைகளை நடிகர்கள் முன் திணிப்பது நாளடைவில் மற்றவர்களும் பின்பற்ற தொடங்கும் தவறான உதாரணமாகி விடும்.

இவர்களை போன்றவர்கள் சினிமா வேறு, நிஜம் வேறு என்பதை எப்போது உணரப் போகிறார்களோ? இனி இதுபோன்ற செயல்களை அனுமதிக்கா வண்ணம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க அரசையும், திரைத்துறை சார்ந்தவர்களையும் வலியுறுத்துகிறேன்.

Related Stories: