தூத்துக்குடியில் காவல் மரணம் தமிழக காவல்துறை நிர்வாக திறனை இழந்து விட்டதோ? இந்திய கம்யூ.கேள்வி

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சில வாரங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி சபரிவர்மன், காவல் துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட அதிர்வலைகள் இன்னும் அடங்கவில்லை. அதற்குள் தூத்துக்குடி காவல்துறையினர் கடந்த 17ம் தேதி விசாரணைக்கு அழைத்துச் சென்ற அருணாசலம் என்பவரின் காவல் மரணம் நிகழ்ந்திருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழ்நாடு காவல்துறை தனது துறையை வழிநடத்தும் நிர்வாகத் திறனை இழந்து விட்டதோ என்ற ஆழ்ந்த சந்தேகம் ஏற்படுத்துகிறது. காவல் மரணங்களை முற்றிலுமாக தடுக்கும் வகையில் காவல்துறை நிர்வாகத்தை சீரமைக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தூத்துக்குடி காவல் மரணத்தில் பலியான அருணாசலம் குடும்பத்திற்கு இழப்பீடும், நீதியும் வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: