திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் பிரமோற்சவம் நடைபெற உள்ளதால், கோயில் அருகில் புனிதமான புஷ்கரணியில் (ெதப்பக்குளம்) சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிகளையொட்டி வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் செப்டம்பர் 10ம் தேதி வரை புஷ்கரணி மூடப்படும். இதனால் மொத்தம் 40 நாட்களுக்கு சகஸ்ர தீப அலங்கார சேவைக்கு பிறகு தினந்தோறும் நடைபெறும் புஷ்கரணி ஆரத்தி நடைபெறாது. அதேபோல், பக்தர்கள் தெப்பக்குளத்தில் புனித நீராடவும், நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
